Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மோசடியில் இது புதுவிதம்: பாக்.,கிற்கு உளவுபார்த்ததாக மிரட்டி மூதாட்டியிடம் ரூ.22 லட்சம் பறித்த கும்பல்

மோசடியில் இது புதுவிதம்: பாக்.,கிற்கு உளவுபார்த்ததாக மிரட்டி மூதாட்டியிடம் ரூ.22 லட்சம் பறித்த கும்பல்

மோசடியில் இது புதுவிதம்: பாக்.,கிற்கு உளவுபார்த்ததாக மிரட்டி மூதாட்டியிடம் ரூ.22 லட்சம் பறித்த கும்பல்

மோசடியில் இது புதுவிதம்: பாக்.,கிற்கு உளவுபார்த்ததாக மிரட்டி மூதாட்டியிடம் ரூ.22 லட்சம் பறித்த கும்பல்

UPDATED : ஜூன் 18, 2025 10:30 PMADDED : ஜூன் 18, 2025 10:05 PM


Google News
Latest Tamil News
மும்பை: மும்பையைச் சேர்ந்த 62 வயது மூதாட்டியிடம், பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக மிரட்டி ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாட்டில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மொபைல்போன் மூலம் அழைத்து டிஜிட்டல் மூலம் கைது செய்வதாக கூறி, மர்ம நபர்கள் பொது மக்களிடம் பணம் பறித்து வருகின்றனர். இதில், படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் என வித்தியாசம் இல்லாமல் ஏமாறுகின்றனர். இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், மோசடியாளர்கள் புதுப்புது ஐடியாக்கள் மூலம் பணம் பறித்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில், மும்பையை சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் புதுவகையாக மிரட்டி மர்ம கும்பல் ஒன்று ரூ.22 லட்சம் மோசடி செய்துள்ளது. இது குறித்த தகவல் பின்வருமாறு:

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள கிர்கோன் பகுதியில் வசித்து வரும் 64 வயது மூதாட்டியை , மர்ம நபர்கள் கடந்த 5 ம் தேதி முதல் 10ம் தேதி வரை தொலைபேசியில் அழைத்து மிரட்டி உள்ளனர். அப்போது அவர்கள், தாங்கள் டில்லி பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் காஷ்மீர் போலீசார் பேசுகிறோம் என மிரட்டி உள்ளனர்.

மேலும் அந்த மூதாட்டி, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி அச்சுறுத்திய அந்த கும்பல், இதற்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனக்கூறியுள்ளனர்.

இதனால் பயந்து போன அந்த மூதாட்டியிடம் பணம் கேட்டுள்ளனர். இதனை நம்பி அவர்கள் கூறியபடி பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு ரூ.22.4 லட்சம் பணத்தை அந்த மூதாட்டி அனுப்பி உள்ளார். இதன் பிறகு அந்த மர்ம நபர்கள் அவரை தொடர்பு கொள்ளவில்லை. இதன்பிறகே ஏமாந்தது அந்த மூதாட்டிக்கு தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக கூறி ஏமாற்றுவது இந்தியாவில் இது முதல்முறை என போலீசார் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us