Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஒலிபெருக்கிகள் இல்லா நகரமானது மும்பை

ஒலிபெருக்கிகள் இல்லா நகரமானது மும்பை

ஒலிபெருக்கிகள் இல்லா நகரமானது மும்பை

ஒலிபெருக்கிகள் இல்லா நகரமானது மும்பை

ADDED : ஜூன் 29, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
மும்பை: மும்பையில் உள்ள வழிபாட்டு தலங்களில் இருந்த ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டதை அடுத்து ஒலிபெருக்கிகள் இல்லாத நகரமாக மாறியுள்ளது.

மஹாராஷ்டிராவின் மும்பை புறநகர் பகுதியான குர்லாவை சேர்ந்த குடியிருப்போர் சங்கங்கள் தங்கள் பகுதியில் உள்ள மசூதிகளில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளால் ஒலி மாசு ஏற்படுவதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

ஜனவரியில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒலி மாசு விதியை மீறும் ஒலிபெருக்கிகளை அகற்ற போலீசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மும்பையில் உள்ள மத வழிபாட்டு தலங்களில் வைக்கப்பட்டிருந்த, 1,500 ஒலிபெருக்கிகளை போலீசார் அகற்றினர்.

இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பர்தி நேற்று கூறியதாவது:

முதல்வர் தேவேந்திர பட்னவிசின் அறிவுறுத்தல் படி முறையான மற்றும் தன்னிச்சையற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒலி பெருக்கிகள் இல்லாத நகரமாக மும்பை மாறியுள்ளது. எந்த மத கட்டமைப்பையும் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஒலி பெருக்கிகளை அகற்றும் முன் சமுதாய மற்றும் மதத்தலைவர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளையும் சந்தித்து பேசினோம். நிரந்தர ஒலிபெருக்கிகள் மீதான தடை தான் இப்போது அமலில் உள்ளது. எனினும் மத விழாக்களின் போது ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்த தற்காலிக அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us