புனே வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் 2 ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிக்கினர்!
புனே வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் 2 ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிக்கினர்!
புனே வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் 2 ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிக்கினர்!
ADDED : மே 17, 2025 12:57 PM

மும்பை; மும்பை விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்.,இயக்க பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
புனேவில் 2023ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் என்.ஐ.ஏ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந் நிலையில் 2 ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 2 பேரை மும்பை விமான நிலையத்தில் வைத்து என்.ஐ.ஏ., அமைப்பினர் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு புனே வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது.
அவர்கள் இருவரின் பெயர்கள் அப்துல்லா பையாஸ் ஷேக் (எ) டயாபர்வாலா, டால்கா கான். இருவரும் இந்தோனேசியாவில் இருந்து ஜகார்த்தா வழியாக இந்தியா திரும்பி உள்ளனர். மும்பை விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் சோதனையில் இருவரும் சிக்கி உள்ளனர்.
அவர்களை என்.ஐ.ஏ., அமைப்பினர், அடுத்தக்கட்ட விசாரணைக்காக கைது செய்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். இருவரும் மீதும் ஜாமினில் வெளிவர முடியாதபடி மும்பை சிறப்பு கோர்ட் கைது வாரண்ட்டை பிறப்பித்து இருந்தது. மேலும் இவர்களை பிடித்துக் கொடுத்தால் ரூ.3 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ., அறிவித்து இருந்தது.