Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ எம்.பி., மஹுவா மொய்த்ரா திருமணம்

எம்.பி., மஹுவா மொய்த்ரா திருமணம்

எம்.பி., மஹுவா மொய்த்ரா திருமணம்

எம்.பி., மஹுவா மொய்த்ரா திருமணம்

ADDED : ஜூன் 06, 2025 12:21 AM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்கட்டா: திரிணமுல் காங்., -- எம்.பி., மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி., பினாகி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ரா, 2019-ல் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2024-ல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து எம்.பி.,யானார். பார்லிமென்டில் கேள்வி கேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கி, 2023ல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இவர், ஒடிஷாவின் பிஜு ஜனதா தளத்தின் புரி தொகுதி முன்னாள் எம்.பி., பினாகி மிஸ்ராவை மணந்துள்ளார். 50 வயதான மஹுவா மொய்த்ராவும், 65 வயதான பினாகி மிஸ்ராவும் திருமண உடையுடன் கைகோர்த்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

மே 3ல், ஜெர்மனியின் பெர்லினில் இருவருக்கும் எளிமையாக திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபரத்தை அவர்கள் நேற்றுதான் வெளியிட்டனர்.

பினாகி மிஸ்ரா, சங்கீதா மிஸ்ரா என்பவரை மணந்து விவாகரத்து பெற்றவர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மஹுவா, டென்மார்க் நாட்டை சேர்ந்த லார்ஸ் பிரார்சன் என்பவரை மணந்து, பின் விவாகரத்து பெற்றவர்.