வனப்பகுதியில் தாய் புலி, 4 குட்டிகள் உயிரிழப்பு: விசாரணைக்கு அரசு உத்தரவு
வனப்பகுதியில் தாய் புலி, 4 குட்டிகள் உயிரிழப்பு: விசாரணைக்கு அரசு உத்தரவு
வனப்பகுதியில் தாய் புலி, 4 குட்டிகள் உயிரிழப்பு: விசாரணைக்கு அரசு உத்தரவு
ADDED : ஜூன் 26, 2025 10:03 PM

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மலை மாதேஸ்வரா வனத்தில் தாய் புலி மற்றும் அதன் 4 குட்டிகளும் உயிரிழந்த சம்பவம் குறித்து மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹுக்யாம் வனப்பகுதிக்கு உட்பட்ட மலே மாதேஸ்வரா மலைப்பகுதியில் தாய் புலி மற்றும் அதன் 4 குட்டிகளும் இறந்து கிடந்தன . நேரில் சென்று ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள்,இது இயற்கைக்கு மாறான மரணம் என்று கூறினர். இந்த சம்பவம் குறித்து மாநில அமைச்சரின் கவனத்திற்கு சென்றது.
இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே கூறியதாவது:
புலிகள் பாதுகாப்புக்கு பெயர் பெற்ற இம்மாநிலத்தில் ஒரே நாளில் 5 புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது.புலிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த விசாரணை, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையிலான குழுவால் நடத்தப்படும்.
குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன்.
வன ஊழியர்களின் அலட்சியம் காரணமாகவோ, அல்லது மின்சாரம் தாக்கி, அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால், பொறுப்பானவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஈஸ்வர் காந்த்ரே கூறினார்.