சந்தேகங்களை பொய்யாக்கி வளர்ச்சி பாதையில் செல்கிறது இந்தியா: மோகன் பகவத் பேச்சு
சந்தேகங்களை பொய்யாக்கி வளர்ச்சி பாதையில் செல்கிறது இந்தியா: மோகன் பகவத் பேச்சு
சந்தேகங்களை பொய்யாக்கி வளர்ச்சி பாதையில் செல்கிறது இந்தியா: மோகன் பகவத் பேச்சு
ADDED : செப் 14, 2025 10:01 PM

புதுடில்லி:'' அனைவரின் கணிப்புகளை பொய்யாக்கி, இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறி செல்கிறது,'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மோகன் பகவத் பேசியதாவது: 3 ஆயிரம் ஆண்டுகளாக உலகத்திற்கு தலைமை ஏற்று இந்தியா வழி நடத்திய போது எங்கும் மோதல் நடக்கவில்லை. உலகில் தற்போது நடக்கும் அனைத்து மோதல்களுக்கும் சுயநலனே காரணம். இது அனைத்து பிரச்னைகளையும் உருவாக்குகிறது.பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்தியா முன்னேறாது. பிரிந்து போகும் எனக்கூறினார். ஆனால், அது நடக்கவில்லை. தற்போது, பிரிட்டன் தான் பிரிவினையின் முனையில் நிற்கிறது. நாம் பிரிய மாட்டோம். நாம் முன்னேறி செல்வோம். ஒரு முறை நாம் பிரிக்கப்பட்டோம். ஆனால், நாம் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டோம்.
நம்பிக்கை அடிப்படையில் உலகம் இயங்கும் போது, செயல் ஆற்றல் கொண்ட மனிதர்களை கொண்ட நம்பிக்கையின் பூமியாக பாரதம் உள்ளது.வாழ்க்கை என்ற மேடையில் நாம் நடிகர்களாக இருக்கிறோம். நாம் நமது கதாபாத்திரங்களை நடிக்க வேண்டும். நாடகம் முடியும் போது உண்மையான சுயம் வெளிப்படும். பாரதத்தில் நிலவும் நம்பிக்கை அறிவு மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு அவர் பேசினார்.