மொஹல்லா கிளினிக் ஊழியர்களுக்கு பணி நீடிப்பு
மொஹல்லா கிளினிக் ஊழியர்களுக்கு பணி நீடிப்பு
மொஹல்லா கிளினிக் ஊழியர்களுக்கு பணி நீடிப்பு
ADDED : மே 15, 2025 09:40 PM
திமர்பூர்:நிதித்துறையையும் வைத்திருக்கும் முதல்வர் ரேகா குப்தா, தன் முதல் பட்ஜெட் உரையில், டில்லி முழுவதும் மொத்தம் 1,139 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாநில அரசின் சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது. அதனால் முந்தைய ஆம் ஆத்மி அரசு செயல்படுத்திய மொஹல்லா கிளினிக்குகள் மூடப்படுமென தகவல் பரவியது.
இவற்றில் பணியாற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு வேலை பறிபோகுமோ என்ற அச்சம் நிலவியது.
இந்த நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பங்கஜ் சிங் நேற்று, “ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களை திறப்பதற்கு தேவையான மனிதவளத்தை நியமிப்பதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை அரசு விரைவில் துவங்கும். அந்த செயல்முறை முடியும் வரை, மறு உத்தரவு வரும் வரை மொஹல்லா கிளினிக் ஊழியர்கள் அனைவரும் பணியில் நீடிப்பர்,” என்றார்.
தேசிய தலைநகரில் தற்போது 553 மொஹல்லா கிளினிக்குகள் உள்ளன. அவற்றில் 70ஐ ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களாக மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.