ADDED : ஜூன் 07, 2024 11:20 PM

நான் எனக்காக எந்த அமைச்சர் பதவியையும் கேட்கவில்லை. இப்போது என் ஒரே நோக்கம், மீண்டும் மோடியை பிரதமர் ஆக்குவது தான். யாருக்கு அமைச்சர் பதவி என்பதை அவர் முடிவு செய்வார்.
சிராக் பஸ்வான், தலைவர், லோக் ஜனசக்தி ராம் விலாஸ்
ஆட்டநாயகன் ராகுல்!
இந்த தேர்தலில் உண்மையில் ராகுல் தான் ஆட்டநாயகன். அரசை எதிர்த்து நிற்க கூடிய பலமான எண்ணிக்கையை பெற்றுள்ளோம். லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்து கட்சியை ராகுல் வழிநடத்த வேண்டும். இதை அவரிடமே கூறியுள்ளேன்.
சசிதரூர், மூத்த தலைவர், காங்கிரஸ்
தோற்றவர்கள் கொண்டாடுகின்றனர்!
பிரதமர் மோடி தலைமையில், மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கப் போவது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. ஆனால், 100 சீட்டு கூட வெல்ல முடியாத காங்கிரஸ், இதை வெற்றி என கொண்டாடுவது நகைப்புக்குரியது.
தினேஷ் சர்மா, ராஜ்யசபா எம்.பி., -- பா.ஜ.,