
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று, தமிழக அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார். காவிரி நம் தண்ணீர், நம் உரிமை. கடந்த காலத்தில் ஜே.எச்.படேல் முதல்வராக இருந்தபோதும், நாங்கள் பலமுறை தண்ணீர் பிரச்னை குறித்து விவாதித்து உள்ளோம்.
அதிக நன்மை
மேகதாது திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி வாங்கி தருவதாக தேவகவுடாவும், குமாரசாமியும் கூறி இருந்தனர். இதுவரை ஏன் செய்யவில்லை? அரசியலில் பல அழுத்தங்கள் உள்ளன. மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட, தமிழகத்திற்கு தான் அதிக நன்மை.
அரசியல் ஓய்வு
அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறியது பா.ஜ., தலைவர்கள் தான். நான் கூறியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். அரசியலமைப்பு விவகாரம் குறித்து மேலிட தலைவர்களிடம் என்னிடம் கேட்டனர். ஆவணங்களை எடுத்து பார்க்கும்படி கூறினேன். அவர்களும் பார்த்துவிட்டு என் மீது தவறு இல்லை என்று புரிந்து கொண்டனர்.