மாருதி கார்களின் விலை மளமளவென குறைப்பு; எந்தெந்த மாடல்களுக்கு என்னென்ன விலை?
மாருதி கார்களின் விலை மளமளவென குறைப்பு; எந்தெந்த மாடல்களுக்கு என்னென்ன விலை?
மாருதி கார்களின் விலை மளமளவென குறைப்பு; எந்தெந்த மாடல்களுக்கு என்னென்ன விலை?
ADDED : செப் 19, 2025 11:39 AM

சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக, மாருதி சுஸூகி கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரியை, 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றியமைத்தது.
மேலும், 350 சிசிக்கு குறைவான பைக்குகள், 1200 சிசிக்கு குறைவான 4 சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்தது. இதன் காரணமாக, கார்களின் விலையை முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து வெளியிட்டு வந்தன.
அந்த வகையில், தற்போது மாருதி சுஸூகி கார்களின் விலையையும் குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, Ex Showroom விலையில் இருந்து, மாடலை பொறுத்து, குறைந்தபட்சம் ரூ.46,000 முதல் அதிகபட்சம் ரூ.1,29,000 வரையில் விலை குறைக்கப்பட்டுள்ளது. செப்., 22ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி கார்களின் புதிய விலை இதோ!
மாடல் - புதிய விலை ((Ex Showroom)- குறைக்கப்பட்ட தொகை
S presso - ரூ.3.5 லட்சம்- ரூ.1.3 லட்சம்
Alto k10 - ரூ.3.7 லட்சம் - ரூ.1.1 லட்சம்
Celerio - ரூ.4.7 லட்சம் - ரூ.94.1 ஆயிரம்
Wagon R -ரூ. 5 லட்சம் - ரூ.79.6 ஆயிரம்
Ignis - ரூ.5.3 லட்சம் - ரூ.71.3 ஆயிரம்
Swift - ரூ.5.8 லட்சம் - ரூ.84.6 ஆயிரம்
Baleno - ரூ.6 லட்சம் - ரூ.86.1 ஆயிரம்
Dzire - ரூ.6.2 லட்சம் - ரூ.87.7 ஆயிரம்
Ertiga - ரூ.8.8 லட்சம் - ரூ.46.4 ஆயிரம்
XL6 - ரூ.11.5 லட்சம் - ரூ.52 ஆயிரம்
Fronx - ரூ.6.8 லட்சம் - ரூ.1.1 லட்சம்
Brezza - ரூ.8.2 லட்சம் - ரூ.1.1 லட்சம்
Grand vitara-ரூ.10.8 லட்சம் - ரூ.1.1 லட்சம்
Jimny - ரூ.12.3 லட்சம் - ரூ.51.9 ஆயிரம்
விலை குறைப்பு நடவடிக்கை இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையில், குறிப்பாக பட்ஜெட் மற்றும் சிறிய எஸ்யூவி வகைகளில் தேவையை புதுப்பிக்க உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விலைக்குறைப்பு, பொதுமக்களின் கார் வாங்கும் திறனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலம் என்பதால், மாருதி கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.