சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டவர் அடித்து கொலை
சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டவர் அடித்து கொலை
சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டவர் அடித்து கொலை
ADDED : அக் 24, 2025 02:24 AM
புதுடில்லி:சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக, 22 வயது இளைஞரை அடித்து கொன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வட கிழக்கு டில்லியின் நந்த் நக்ரி மேம்பாலத்தில், நேற்று மதியம் நிகழ்ந்த மோதலில், சல்மான், 22, என்ற நபரை கும்பல் அடித்து கொன்றது.
அவருடன் இருந்த சோகைல், 26, என்ற நபர் போலீசில் தெரிவித்த புகாரில், 'வீடியோ வெளியிட்ட தகறாரில், சல்மானை அந்த கும்பல் தாக்கியது.
தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். எனினும், அவர் இறந்து விட்டார்' என கூறினார்.
அவரை தாக்கியவர்கள் யார்; எதற்காக தாக்கினர் என்பது குறித்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


