ADDED : ஜூன் 11, 2025 01:03 AM

மேற்கு வங்கத்தில் சட்ட விரோத ஊடுருவல்காரர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அடைக்கலம் கொடுத்து வருகிறார். அவர்களை இந்த நாட்டின் குடிமக்களாக மாற்ற அவர் முயற்சிக்கிறார். தேர்தலில் வெற்றி பெறவே, அவர் இதை செய்கிறார். 2026 தேர்தலில் மம்தாவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.
பூபேந்திர யாதவ்
மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஒரே அளவுகோல்!
மேற்கு வங்கத்தில் மதத்தின் அடிப்படையில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு அந்தஸ்து தரப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறு. பின்தங்கிய நிலையே, ஓ.பி.சி., அந்தஸ்தின் ஒரே அளவுகோல். இதையே திரிணமுல் காங்., அரசு பின்பற்றி வருகிறது.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர்,
திரிணமுல் காங்.,
பொய் பேசும் பா.ஜ.!
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 82 பேர் உயிரிழந்திருப்பதாக, பி.பி.சி., செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், ஆளும் பா.ஜ., அரசோ, 37 பேர் மட்டுமே இறந்ததாக தெரிவித்தது. துயரமான சம்பவத்திலும் பா.ஜ., பொய் சொல்கிறது.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி