Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மகாநவமி நவராத்திரி உற்சவம் : 15 யானைகள் அணிவகுப்பு

மகாநவமி நவராத்திரி உற்சவம் : 15 யானைகள் அணிவகுப்பு

மகாநவமி நவராத்திரி உற்சவம் : 15 யானைகள் அணிவகுப்பு

மகாநவமி நவராத்திரி உற்சவம் : 15 யானைகள் அணிவகுப்பு

ADDED : அக் 02, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரபுள்ளி அக்ரஹாரம் ஆதிகே சவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், மகாநவமி நவராத்திரி உற்சவம் விமர்சையாக நடந்தது.

கேரள மாநிலம், பாலக்காட்டில் கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஆதிகேசவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் மகாநதி நவராத்திரி உற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது.

அதிகாலை நிர்மால்ய தரிசனத்துடன் கோவில் நிகழ்வுகள் துவங்கியது. காலை, 7:00 மணிக்கு யானைகளுக்கு உணவளிக்கும் 'யானையூட்டு' நிகழ்ச்சி நடந்தது. 7:30 மணிக்கு அயிலூர் அனந்தநாராயணன் மாராரின் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சவாத்தியம் முழங்க, ஆடை ஆபரணங்கள் அணிந்து, முத்துமணி குடை சூடிய யானைகள் அணிவகுப்பில் 'காழ்ச்ச சீவேலி' நடந்தது.

அதன்பின், காலை, 10:30 மணிக்கு பெருவனம் சதீசன் மாரார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற 'பஞ்சாரிமேளம்' என்ற செண்டைமேளம் நிகழ்வு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை, 4:30 மணிக்கு பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம், பூக்காவடி, நாதஸ்வரம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த, 15 யானைகளின் அணிவகுப்பில் முத்து மணி வண்ண குடை மாற்றம் நிகழ்ச்சி நடந்தது.

இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். அதன்பின், நாதஸ்வர கச்சேரி, 'பாண்டிமேளம்' ஆகியவை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us