அடுக்குமாடி குடியிருப்பில் தனிமை: சாப்ட்வேர் இன்ஜினியர் 3 ஆண்டுகளுக்கு பின் மீட்பு
அடுக்குமாடி குடியிருப்பில் தனிமை: சாப்ட்வேர் இன்ஜினியர் 3 ஆண்டுகளுக்கு பின் மீட்பு
அடுக்குமாடி குடியிருப்பில் தனிமை: சாப்ட்வேர் இன்ஜினியர் 3 ஆண்டுகளுக்கு பின் மீட்பு
ADDED : ஜூன் 30, 2025 09:35 PM

மும்பை: அடுக்குமாடி குடியிருப்பில் தனிமைப்படுத்திக்கொண்ட சாப்ட்வேர் இன்ஜினியர், 3 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையின் ஜூய்நகரின் செக்டர் 24 இல் உள்ள கர்கூல் சொசைட்டியில் அனுப்குமார் நாயர் 55, வசித்து வந்தார். அவர்,அரசு சாரா நிறுவனமான சீல் (சோஷியல் அண்ட் எவாஞ்சலிகல் அசோசியேஷன் பார் லவ்) என்ற நிறுவனத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமராக பணிபுரிந்தார்.
சில காலமாக பணிக்கு வராத நிலையில், அந்த நிறுவனத்தின் குழுவினர் அவர் வசிக்கும் அடுக்குமாடி வீட்டில் நுழைந்து பார்த்தபோது, அனுப்குமார் குப்பைகளுக்கு மத்தியில், காலில் கடுமையான தொற்று நோயால் அவதிப்படுவதை கண்டனர்.
விசாரித்ததில், அவர்,சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது பெற்றோரின் மரணம் மற்றும் அவரது மூத்த சகோதரர் தற்கொலை செய்து கொண்டது என தொடர்ச்சியான துயரத்தால் மனரீதியாக சோர்வடைந்து மன அழுத்தம் காரணமாக, வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார். அவருக்கு உள்ள ஒரே தொடர்பு உணவு விநியோக செயலிகள் மூலம் அடிப்படை தேவைகள் ஓரளவு பூர்த்தி அடைந்தது.
இது குறித்து கர்கூல் சொசைட்டியின் தலைவர் விஜய் ஷிபே கூறியதாவது:
சமூகத்தில் அக்கறை கொண்ட ஒருவர் பிளாட்டின் குழப்பமான நிலை குறித்து சீல் நிறுவனத்திற்கு எச்சரிக்கை செய்ததைத் தொடர்ந்து அவரது நிலை வெளிச்சத்திற்கு வந்தது. அமைப்பு சாரா குழு , அடுக்குமாடி குடியிருப்பை அணுகி உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது.
அவர் எப்போதாவதுதான் தனது கதவைத் திறப்பார், குப்பைகளை ஒருபோதும் அப்புறப்படுத்தவில்லை.நாங்கள் அவருக்கு , முடிந்தவரை நிதி உதவியும் வழங்கினோம்.
இவ்வாறு கூறினார்.
தற்போது, நாயர் பன்வேலில் உள்ள சீல் ஆசிரமத்தில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெற்று வருகிறார்.
அனுப்குமார் கூறுகையில், என் பெற்றோர் இல்லை, என் மூத்த சகோதரரும் இல்லை, எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. என் உடல்நிலையும் சரியில்லை. எனவே ஒரு புதிய வாழ்க்கை ஏதும் இல்லை என்றார்.