இந்தியா தாக்கிய பாக்., விமானப்படை தளங்கள் பட்டியல்!
இந்தியா தாக்கிய பாக்., விமானப்படை தளங்கள் பட்டியல்!
இந்தியா தாக்கிய பாக்., விமானப்படை தளங்கள் பட்டியல்!

நூர்கான் தளம்
முன்பு சக்லாலா விமானப்படை தளம் என அழைக்கப்பட்ட இந்த நூர் கான் விமான படை தளம் ராவல்பிண்டியில் அமைந்துள்ளது. இந்த விமான தளம் பாகிஸ்தானின் வான் வழி இயக்கத்தின் முக்கிய மையமாகவும், அதன் வான்வெளி விமான போக்குவரத்து கட்டளை தலைமையகமாகவும் செயல்பட்டது.கடந்த 72 மணி நேரத்தில் இந்திய நகரங்கள் மீது டுரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதில் இந்த விமானப்படை தளத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய பல போர் விமானங்களும் இந்த தளத்தில்தான் இருந்தன.
ரபிக்கி விமான படை தளம்
இந்த விமான படைதளம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. மிராஜ் மற்றும் ஜேஎப்.,17 போர் விமானங்கள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன. பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் பாக்., தாக்குதல் இங்கிருந்து தான் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்நாட்டின் தாக்குதல் திறனுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தப்பட்டது.
முரித் விமானபடைதளம்
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்த விமானபடை தளமானது, அந்நாட்டின் டுரோன் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகத்தது. பாகிஸ்தான் உருவாக்கிய ஷாபார் , துருக்கியின் பைரக்தார் டிபி2 மற்றும் அகின்சி டுரோன்கள் இங்கிருந்து தான் அனுப்பப்பட்டன. கடந்த சிலநாட்களாக இங்கிருந்து தான் எல்லையை தாண்டி நூற்றுக்கணக்கான டூரோன்கள் அனுப்பப்பட்டன. இந்தியாவின் நிலைகள் குறித்து உளவறியவும், ஆயுதங்களுடனும் டுரோன்களை அனுப்பப்பட்டன. அவற்றின் பெரும்பாலான டுரோன்களை இந்தியா தாக்கி அழித்தது.