மத உணர்வை புண்படுத்தியதாக சட்ட கல்லுாரி மாணவி கைது
மத உணர்வை புண்படுத்தியதாக சட்ட கல்லுாரி மாணவி கைது
மத உணர்வை புண்படுத்தியதாக சட்ட கல்லுாரி மாணவி கைது
ADDED : ஜூன் 01, 2025 12:46 AM

குருகிராம் : மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சட்டக் கல்லுாரி மாணவி ஷர் மிஸ்தா வெளியிட்ட ஆப்பரேஷன் சிந்துார் குறித்த வீடியோவில், முஸ்லிம்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசியதாக கூறி, மேற்கு வங்க போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்தவர் ஷர்மிஸ்தா பனோலி, 22. அங்கு உள்ள சட்டக் கல்லுாரியில் நான்காம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். சமூக வலைதளத்தில் இவரை 10,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.
இவர், பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்துார் குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் வீடியோ வெளியிட்டார்.
அதில், ஆப்பரேஷன் சிந்துார் குறித்து வாய் திறக்காத பாலிவுட் நடிகர், நடிகையரையும், முஸ்லிம் மதத்தையும் கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு கொலை மிரட்டல் அழைப்புகள் வரத் துவங்கின. கொல்கட்டா போலீசில் ஷர்மிஸ்தா மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதையடுத்து, தான் வெளியிட்ட வீடியோவை நீக்கிவிட்டு, 'நான் யாரையும் வேண்டுமென்றே காயப்படுத்த நினைக்கவில்லை. இனிமேல், என் கருத்துகளில் எச்சரிக்கையாக இருப்பேன்' என அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் இருந்த ஷர்மிஸ்தாவை கொல்கட்டா போலீசார் நேற்று கைது செய்தனர். அவரின் கைதுக்கு பா.ஜ., - எம்.பி., கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.