Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கேதர்நாத்தில் நிலச்சரிவு: 3 பக்தர்கள் பலி, 8 பேர் காயம்

கேதர்நாத்தில் நிலச்சரிவு: 3 பக்தர்கள் பலி, 8 பேர் காயம்

கேதர்நாத்தில் நிலச்சரிவு: 3 பக்தர்கள் பலி, 8 பேர் காயம்

கேதர்நாத்தில் நிலச்சரிவு: 3 பக்தர்கள் பலி, 8 பேர் காயம்

ADDED : ஜூலை 21, 2024 12:31 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கேதர்நாத்: உத்தரகண்ட்டில் உள்ள கேதர்நாத் கோயிலுக்கு செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர்.

உத்தரகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கேதர்நாத் கோயிலுக்கு செல்லும் வழியில் கவுரிகுண்ட் மற்றும் சிர்பஸா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், கோயிலுக்கு சென்ற பக்தர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

2 பேர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். 3வது நபர் ருத்ரபிரயாக் மாவட்டத்தை சேர்ந்தவர். 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us