Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/3 நாளில் எதிரியை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் கவர்னர் பெருமிதம்

3 நாளில் எதிரியை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் கவர்னர் பெருமிதம்

3 நாளில் எதிரியை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் கவர்னர் பெருமிதம்

3 நாளில் எதிரியை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் கவர்னர் பெருமிதம்

Latest Tamil News
பூஞ்ச்: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத தளங்களை அழித்து எதிரியை மண்டியிட வைத்த உங்களின் துணிச்சலால் நாடு பெருமை கொள்கிறது என்று ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா ராணுவத்தை பாராட்டி உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் படைப்பிரிவு தலைமையகத்திற்கு கவர்னர் மனோஜ் சின்ஹா சென்றார். அங்கு இந்திய ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்புப் படையினரை சந்தித்தார். பின்னர் அவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

அப்போது பேசியதாவது: இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத தளங்களை அழித்ததை உலகம் அறியும். 3 நாட்களில் எதிரியை மண்டியிட வைத்தீர்கள். உங்கள் துணிச்சல், வீரத்தால் நாடு பெருமை கொள்கிறது.

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். மிக விரைவில் 4வது பெரிய பொருளாதார நாடாக மாறுவோம். நமது அண்டை நாடு, வாங்கிய கடன்களை கொண்டு பயங்கரவாதத்தை வளர்க்க முயற்சிக்கிறது. இவ்வாறு மனோஜ் சின்ஹா பேசினார்.

ராணுவ படையை சந்தித்ததோடு, பூஞ்சில் உள்ள குருத்வாராவுக்கும் சென்று மனோஜ் சின்ஹா வழிபாடு செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us