Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பீஹார் தேர்தல் விறுவிறு; 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்

பீஹார் தேர்தல் விறுவிறு; 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்

பீஹார் தேர்தல் விறுவிறு; 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்

பீஹார் தேர்தல் விறுவிறு; 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்

Latest Tamil News
பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் பட்டியலை நிதிஷ்குமார் வெளியிட்டுள்ளார்.

பீஹார் சட்டசபை தேர்தல் நவ.6 மற்றும் நவ.11 என இரு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சிகள் கூட்டணி தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளன. பல்வேறு கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், ஐக்கிய ஜனதாதளம் தமது கட்சி போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 57 வேட்பாளர்கள் இடம் பிடித்துள்ளனர். வேட்பாளர்கள் பட்டியலில் கூட்டணியின் சிராக் பாஸ்வான் கட்சி கேட்டு வரும் 4 தொகுதிகளையும் குறிப்பிட்டு அதில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

கட்சியின் முக்கிய முகமாக அறியப்படும் வேட்பாளர்களான ரத்னேஷ் சதா சோன்பர்சா தொகுதியிலும், மோர்வா தொகுதியில் வித்யாசாகர் நிஷாத்தும் போட்டியிடுகின்றனர்.

ஏக்மா தொகுதியில் தூமல் சிங், ராஜ்கிர் தொகுதியில் கவுஷல் கிஷோரும் களம் காண்கின்றனர். நிதிஷ்குமார் வெளியிட்ட பட்டியலில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள பலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us