ADDED : ஜூன் 18, 2025 12:08 AM

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில், தனிநபரின் ஜாதியை மட்டும் மத்திய அரசு சேகரிக்கக்கூடாது; அவர்களின் வாழ்க்கை தரத்தை அறிந்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கொள்கை திட்டங்களை உருவாக்க வேண்டும். இக்கணக்கெடுப்புக்கு, 10,000 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், 574 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சச்சின் பைலட், பொதுச்செயலர், காங்கிரஸ்
பொய் பிரசாரம்!
மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆனால், சமூகத்தில் பிரிவினையை உருவாக்கி, அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்கிறது. ஜாதியை பயன்படுத்தி, ஓட்டு வங்கி அரசியலை மேற்கொள்ளும் காங்கிரஸ், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை.
சுதான்சு திரிவேதி, ராஜ்யசபா எம்.பி., பா.ஜ.,
பதவி விலக வேண்டும்!
குஜராத் விமான விபத்திற்கு பொறுப்பேற்று, இதுவரை யாரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை. புல்வாமா, பஹல்காம் உள்ளிட்ட தாக்குதல்களுக்கு ராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை. ஆனால், இந்த விமான விபத்திற்கு பொறுப்பேற்று, சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். இதற்கு அரசும் பொறுப்பு.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி