Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம்; அதிகாலை முதலே வரிசையில் நிற்கும் மக்கள்

ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம்; அதிகாலை முதலே வரிசையில் நிற்கும் மக்கள்

ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம்; அதிகாலை முதலே வரிசையில் நிற்கும் மக்கள்

ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம்; அதிகாலை முதலே வரிசையில் நிற்கும் மக்கள்

UPDATED : செப் 19, 2025 12:03 PMADDED : செப் 19, 2025 08:19 AM


Google News
Latest Tamil News
மும்பை: ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதனை வாங்குவதற்காக மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோரில் இன்று அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்று வருகின்றனர்.

ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாகி உள்ளன. இது கடந்த 9ம் தேதி கலிபோர்னியாவின் கியூபெர்டினோ நகரில் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஐஓஎஸ் 26 இயங்குதளத்தில் இந்த போன்கள் வெளியாக உள்ளன. இது ஐபோன் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை ஐபோன் 17 போன்களின் விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் இன்று இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் ஐபோன் 17 மாடல்களின் விலை ரூ.89,000 முதல் தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்த போனை வாங்குவதற்காக, மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோர் முன்பு மக்கள் குவிந்து வருகின்றனர். நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மோதல்

இதனிடையே, கூட்டம் அலைமோதிய நிலையில், ஒருவருக்கொருவர் முண்டியடித்து முன்னேறி செல்ல முயன்றனர். அப்போது, சிலருக்கு கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனை காண்ட பாதுகாவலர்கள், உடனடியாக அவர்களை விலக்கி விட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us