Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஓட்டுக்காக அவமதிப்பு!

ஓட்டுக்காக அவமதிப்பு!

ஓட்டுக்காக அவமதிப்பு!

ஓட்டுக்காக அவமதிப்பு!

UPDATED : ஜூலை 01, 2025 10:38 AMADDED : ஜூலை 01, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
பீஹாரில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., அடங்கிய, 'இண்டி' கூட்டணி ஓட்டு வங்கிக்காக வக்ப் திருத்த சட்டத்தை எதிர்க்கிறது. பார்லி.,யால் முறைப்படி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அக்கூட்டணியினர் அவமதிக்கின்றனர். இந்த கூட்டணியினர், கொல்லைப்புறமாக ஷரியா விதிகளை அமல்படுத்த விரும்புகின்றனர்.

சுதான்ஷு திரிவேதி

செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

நாடு தழுவிய நெறிமுறைகள்!


Image 1437633
ஒடிஷாவின் புரி ஜெகன்னாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்ததற்கு மாநில பா.ஜ., அரசே பொறுப்பு. அதிகளவில் பக்தர்கள் வருவர் என தெரிந்தும், போதுமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. கூட்டத்தை நிர்வகிக்க நாடு தழுவிய நிலையான நெறிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்.

ரன்தீப் சுர்ஜேவாலா

பொதுச்செயலர், காங்.,



பா.ஜ.,வுக்கு புரியவில்லை!


Image 1437634
நம் நாட்டுக்குள் வங்கதேசத்தவர்கள் சட்ட விரோதமாக ஊடுருவுவதை பற்றி பா.ஜ.,வினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். அதே சமயம், பாக்., - வங்கதேசம் ஆகிய நாடுகள் சீனாவுடன் நெருக்கம் காட்டுவதையும், அந்நாட்டுடன் கூட்டுப் பயிற்சி செய்வதையும் அவர்கள் புறக்கணிக்கின்றனர். அண்டை நாடுகளில் நிலவும் நிலைமையை பா.ஜ.,வால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அசாதுதீன் ஓவைசி

தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,







      Our Apps Available On




      Dinamalar

      Follow us