சர்வதேச வளர்ச்சியில் இந்தியா முக்கிய உந்து சக்தி: ரிசர்வ் வங்கி
சர்வதேச வளர்ச்சியில் இந்தியா முக்கிய உந்து சக்தி: ரிசர்வ் வங்கி
சர்வதேச வளர்ச்சியில் இந்தியா முக்கிய உந்து சக்தி: ரிசர்வ் வங்கி
ADDED : ஜூன் 30, 2025 08:28 PM

புதுடில்லி: சர்வதேச வளர்ச்சியில் இந்திய பொருளாதாரம் முக்கிய உந்து சக்தியாக தொடர்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, இன்று 2 ஆண்டு நிதி நிலைத்தன்மை குறித்து அறிக்கை வெளியிட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சர்வதேச அளவில் பொது கடன் பத்திரங்கள் உட்பட நிதிச் சந்தைகள் ஏற்ற இறக்கமாக உள்ளன.
உலக நாடுகளில் பொருளாதாரம் இவ்வாறு இருந்தபோதிலும் இந்தியாவின் உள்நாட்டு நுகர்வு மற்றும் முதலீட்டு வளர்ச்சி உலகின் வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக நிலைநிறுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி, கடுமையான கண்காணிப்பு மற்றும் கொள்கைகளின் பலனாக வளர்ச்சி, குறைந்த பணவீக்கம் மற்றும் நிதித் துறை நிலைப்பு தன்மை தொடருகிறது. வரும் காலங்களிலும் நிதி நிலை பராமரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.