அரசியலமைப்பு சட்ட புத்தகத்துடன் 'இண்டியா' கூட்டணி போராட்டம்
அரசியலமைப்பு சட்ட புத்தகத்துடன் 'இண்டியா' கூட்டணி போராட்டம்
அரசியலமைப்பு சட்ட புத்தகத்துடன் 'இண்டியா' கூட்டணி போராட்டம்
ADDED : ஜூன் 24, 2024 11:13 AM

புதுடில்லி: அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் பார்லி., வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக வெற்றிப்பெற்றது. இதனையடுத்து மோடி, 3வது முறையாக பிரதமரானார். இந்த நிலையில் 18வது பார்லி., கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) துவங்கியது. முதல்நாளில் வெற்றிப்பெற்ற எம்.பி.,க்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் பார்த்துஹரி மஹதப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக பார்லி., வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பார்லி., வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இப்போராட்டத்தில் சோனியா, கார்கே, கனிமொழி, உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.