பதவியேற்பு விழா : உலக தலைவர்களுக்கு மோடி அழைப்பு
பதவியேற்பு விழா : உலக தலைவர்களுக்கு மோடி அழைப்பு
பதவியேற்பு விழா : உலக தலைவர்களுக்கு மோடி அழைப்பு
ADDED : ஜூன் 05, 2024 10:51 PM

புதுடில்லி: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பூட்டான் மன்னர், இலங்கை அதிபர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நடந்த தே.ஜ. கூட்டணி கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். வரும் 8-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பூட்டான் மன்னர், இலங்கை அதிபர், மற்றும் மொரீஷியஸ் , வங்கதேசம், நேபாளம் நாடுகளின் பிரதமர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.