Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஜனநாயகத்தில் உயர்ந்தது எது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி விளக்கம்

ஜனநாயகத்தில் உயர்ந்தது எது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி விளக்கம்

ஜனநாயகத்தில் உயர்ந்தது எது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி விளக்கம்

ஜனநாயகத்தில் உயர்ந்தது எது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி விளக்கம்

ADDED : ஜூன் 26, 2025 03:32 PM


Google News
Latest Tamil News
மும்பை : '' ஜனநாயகத்தில் அரசியலமைப்பு தான் உயர்ந்தது,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ஜனநாயகத்தில் நிர்வாகம், சட்டம் இயற்றும் மன்றங்கள் அல்லது நீதித்துறை இவற்றில் எந்தப் பிரிவு மிகப்பெரியது என்ற விவாதம் இருந்து கொண்டு உள்ளது. பார்லிமென்ட் தான் உயர்ந்தது என சிலர் சொல்கின்றனர். ஆனால், என்னை பொறுத்தவரை அரசியலமைப்பு தான் உயர்ந்தது. அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் மூலம் மாற்றவோ அல்லது அழிக்கவோ முடியாது.

அரசுக்கு எதிராக உத்தரவை பிறப்பிப்பதன் வாயிலாக மட்டும் ஒரு நீதிபதி சுதந்திரமானவராக இருக்க முடியாது. அவர், எப்போதும் தனது கடமையை நினைவில் வைத்து இருக்க வேண்டும். குடிமக்களின் உரிமைகள் மற்றும் அரசியலமைப்பின் மாண்புகள் மற்றும் கொள்கைகளுக்கு நாம் தான் பாதுகாவலர்கள். நமக்கு அதிகாரம் மட்டும் இல்லை. நம் மீது கடமையும் சுமத்தப்பட்டு உள்ளது.


தங்களது தீர்ப்பைப் பற்றி மக்கள் என்ன சொல்வார்கள் என்பது பற்றி சிந்தித்து நீதிபதிகள் செயல்படக்கூடாது. நாம் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். நீதித்துறையை பற்றி மக்கள் சொல்லும் விஷயங்கள் , நமது முடிவுகளை பாதிக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us