பணமிருந்தால் தேர்வு முறையை விலைக்கு வாங்கலாம்: ராகுல் குற்றச்சாட்டு
பணமிருந்தால் தேர்வு முறையை விலைக்கு வாங்கலாம்: ராகுல் குற்றச்சாட்டு
பணமிருந்தால் தேர்வு முறையை விலைக்கு வாங்கலாம்: ராகுல் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 22, 2024 11:46 AM

புதுடில்லி: ''பணமிருந்தால் தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும்; பணம் இருந்தால் இந்திய தேர்வு முறையை விலைக்கு வாங்கிவிடலாம்'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.
பார்லி., கூட்டத்தொடரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எழுப்பி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது:
வினாத்தாள் கசிவு விவகாரம் நமது தேர்வு முறையில் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பணம் இருந்தால் போதும்; இந்திய தேர்வுமுறையை விலைக்கு வாங்கிவிடலாம் என பலரும் நினைக்கின்றனர். பணமிருந்தால் தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும்.
லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். தவறுகளை மத்திய அரசு வேறு பக்கம் திருப்ப பார்க்கிறது. இந்திய தேர்வு முறையே பெரிய மோசடி. நீட் மட்டுமின்றி அனைத்து பெரிய தேர்வுளை நடத்துவதிலும் பிரச்னைகள் உள்ளன. அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒவ்வொருவரையும் குற்றம் சாட்டுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
இனி தவறுகள் நடக்காது
ராகுலுக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில்: ''முந்தைய காங்கிரஸ் அரசு கல்வித்துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவர தவறிவிட்டது. காங்கிரஸ் அரசின் தவறுகளை எங்கள் அரசு சரி செய்து வருகிறது. பொதுத்தேர்வு மசோதாவை முந்தைய காங்கிரஸ் அரசு ஏன் கொண்டுவரவில்லை? தற்போது நடந்த சிறு சிறு பிழைகள் கூட இனி நடக்காது என அரசு உறுதியளிக்கிறது''. இவ்வாறு பதிலளித்தார்.