மனைவி கேலி செய்ததால் கணவர் தற்கொலை
மனைவி கேலி செய்ததால் கணவர் தற்கொலை
மனைவி கேலி செய்ததால் கணவர் தற்கொலை
ADDED : மார் 17, 2025 12:24 AM
சாம்ராஜ் நகர்: கர்நாடகாவில், 'தலையில் முடியில்லை' என மனைவி கேலி செய்ததால், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரைச் சேர்ந்தவர் பரசுராம் மூர்த்தி, 32. இவருக்கு, மமதா, 27, என்பவருடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
தம்பதி மகிழ்ச்சியாக இருந்தனர். திருமணமான சில மாதங்களில், பரசுராம் மூர்த்தியின் தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழுந்தது.
இதையே காரணமாக கூறி, கணவரை மமதா வெறுக்க துவங்கினார். 'தலையில் முடியில்லை' என, தினமும் கேலி செய்து துன்புறுத்தினார். பொய்யான வரதட்சணை புகார் அளித்து, கணவரை சிறைக்கு அனுப்பினார்.
அதுமட்டுமின்றி தாலியை கழற்றி விட்டு, சமூக வலைதளங்களில் தன் போட்டோக்களை பதிவிட்டார்.
இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு நடந்தது. மனைவியின் தொந்தரவால், மனம் வெறுத்த பரசுராம் மூர்த்தி, கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.