Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இந்தியா, பாக்., சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை எவ்வளவு?: இரு நாட்டு கைதிகளின் பட்டியல் வெளியீடு

இந்தியா, பாக்., சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை எவ்வளவு?: இரு நாட்டு கைதிகளின் பட்டியல் வெளியீடு

இந்தியா, பாக்., சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை எவ்வளவு?: இரு நாட்டு கைதிகளின் பட்டியல் வெளியீடு

இந்தியா, பாக்., சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை எவ்வளவு?: இரு நாட்டு கைதிகளின் பட்டியல் வெளியீடு

ADDED : ஜூலை 01, 2025 07:58 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: இந்திய சிறைகளில், 463 பாகிஸ்தான் கைதிகளும் பாகிஸ்தான் சிறையில் 146 கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை : துாதரகம் வாயிலாக, தங்கள் நாட்டு சிறையில் உள்ள சிவிலியன் கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியலை இந்தியாவும், பாகிஸ்தானும் பரிமாறி கொண்டுள்ளன. 2008ம் ஆண்டு ஒப்பந்தப்படி, துாதரக உதவி அளிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜன.,1 மற்றும் ஜூலை.,1 அன்று மேற்கண்ட தகவல்கள் பரிமாறி கொள்ளப்படும்.

இதன்படி, பாக்., சிறைகளில் உள்ள 53 சிவிலியன் கைதிகள் மற்றும் 193 மீனவர்கள் என, 246 பேரின் பட்டியல், இந்திய துாதரிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய சிறைகளில் உள்ள 382 சிவிலியன் கைதிகள், 81 மீனவர்கள் என, 463 பேரின் பட்டியல், அந்நாட்டு துாதரிடம் வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் காவலில் உள்ள இந்திய மீனவர்கள்,சிவிலியன் கைதிகள், மாயமான இந்திய பாதுகாப்புப்படை யை சேர்ந்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அந்நாட்டை கேட்டு கொண்டு உள்ளோம். மேலும், தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ள 159 இந்திய மீனவர்கள் மற்றும் சிவிலியன் கைதிகளை உடனடியாக விடுவிப்பதுடன், சிறையில்உள்ள 26 இந்திய கைதிகளுக்கு தூதரக வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளோம்.

80 பாகிஸ்தான் சிறை கைதிகளின், தேசிய நிலையை உறுதிபடுத்த தேவையான, நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், அந்நாட்டிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2014 முதல், தற்போது வரை, இந்தியாவின் முயற்சியால், 2,661 இந்திய மீனவர்களும், 71 சிவிலியன் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 2023 முதல் விடுவிக்கப்பட்ட 500 இந்திய மீனவர்கள் மற்றும் 13 இந்தியசிவில் கைதிகளும் அடக்கம். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us