டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மீது நெடுஞ்சாலை ஆணையம் புகார்
டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மீது நெடுஞ்சாலை ஆணையம் புகார்
டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மீது நெடுஞ்சாலை ஆணையம் புகார்
ADDED : ஜூன் 10, 2025 10:17 PM
புதுடில்லி:'டில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், தங்கள் இஷ்டத்திற்கு, டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் பதாகைகளை வைத்து, விளம்பரம் செய்துள்ளது. அந்த விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.
சமீபத்தில் கூடிய, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இதுபோன்ற பல புகார்களை, டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் கவனத்திற்கு எடுத்துச் சென்றது.
அதற்கு பதிலளித்துள்ள, டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன்,'உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட, விளம்பர கொள்கை - 2017 படியே விளம்பரங்கள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் அத்துமீறல் நடந்துள்ளதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கருதுகிறதோ, அந்த இடங்களில் கூட்டு ஆய்வு நடத்த தயாராக இருக்கிறோம்' என தெரிவித்துள்ளது.