மஹாராஷ்டிரா, கோவாவில் கனமழை கொட்டும்: வானிலை மையம் 'அலர்ட்'
மஹாராஷ்டிரா, கோவாவில் கனமழை கொட்டும்: வானிலை மையம் 'அலர்ட்'
மஹாராஷ்டிரா, கோவாவில் கனமழை கொட்டும்: வானிலை மையம் 'அலர்ட்'

கோவா
கோவா மாநிலத்திற்கு ஞாயிறு 25 வரை அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. நேற்று கோவாவின் வடக்குப்பகுதியில் உள்ள பஞ்சிம் பகுதியில் 9 செ.மீ., மழை பதிவானது. இது வரும் நாட்களில் கோவா, கொங்கன், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனையடுத்து கோவா மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
மும்பை
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் எனவும், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் இன்று லேசான மழை பெய்து வருகிறது. நாள் முழுதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.