நிகழ்காலத்தை விட்டுவிட்டு 2047ம் ஆண்டு கனவுகளை விற்கின்றனர்; ராகுல் குற்றச்சாட்டு
நிகழ்காலத்தை விட்டுவிட்டு 2047ம் ஆண்டு கனவுகளை விற்கின்றனர்; ராகுல் குற்றச்சாட்டு
நிகழ்காலத்தை விட்டுவிட்டு 2047ம் ஆண்டு கனவுகளை விற்கின்றனர்; ராகுல் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 09, 2025 04:56 PM

புதுடில்லி: நிகழ்காலத்தை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, 2047ம் ஆண்டு கனவுகளை மத்திய அரசு விற்பதாக ராகுல் விமர்சித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து மத்திய அரசு மீது ராகுல் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இது குறித்து அவர் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது;
மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் மாற்றம் இல்லை, வெறும் பிரசாரம் மட்டுமே உள்ளது. 2025ம் ஆண்டை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, 2047ம் ஆண்டின் கனவுகளை விற்று வருகிறது. இன்று நாடு துன்பப்படுகிறது? அதை யார் பார்ப்பார்கள்?
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் பெற வாழ்த்துகள்.
இவ்வாறு ராகுல் கூறினார்.