பள்ளிக்கு போதையில் வந்த அரசு ஆசிரியை சஸ்பெண்ட்
பள்ளிக்கு போதையில் வந்த அரசு ஆசிரியை சஸ்பெண்ட்
பள்ளிக்கு போதையில் வந்த அரசு ஆசிரியை சஸ்பெண்ட்
ADDED : ஜூன் 26, 2025 01:21 AM

தார்: மத்திய பிரதேசத்தில், பணிக்கு போதையில் வந்த அரசு பள்ளி ஆசிரியை, பணியாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் தகராறு செய்ததை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் உள்ள மன்வார் அருகேயுள்ள சிங்கனா கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் ஒரு பெண், ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 23ம் தேதி மதுபோதையில், பள்ளிக்கு வந்த அந்த ஆசிரியை, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவியதை அடுத்து மாவட்ட நிர்வாகம், மன்வார் வட்டார கல்வி அதிகாரி தலைமையிலான குழு வாயிலாக விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அவர்கள் அளித்த அறிக்கையின் படி ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.