4.5 கி.மீ., சாலை அமைக்க அரசு அனுமதி
4.5 கி.மீ., சாலை அமைக்க அரசு அனுமதி
4.5 கி.மீ., சாலை அமைக்க அரசு அனுமதி
ADDED : செப் 12, 2025 02:22 AM
புதுடில்லி:மதன்பூர் காதார் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான, ஆலி விஹாரிலிருந்து மதுரா ரோடு சென்றடையும் சாலையை அமைக்க, டில்லி மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த புதிய சாலை, 4.5 கி.மீ., நீளம் கொண்டதாக அமையும் என கிழக்கு டில்லியின் எம்.பி., ஹர்ஷ் மல்ஹோத்ரா கூறினார்.
இதுகுறித்து, மத்திய சாலை போக்குவரத்து துறை இணையமைச்சராக உள்ள கிழக்கு டில்லியின் பா.ஜ., - எம்.பி., ஹர்ஷ் மல்ஹோத்ரா கூறும் போது, ''புதிதாக அமைக்கப்பட உள்ள சாலை, உத்தர பிரதேச நீர் பாசன துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்படும். இதற்காக, 38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
இந்த நிதி, மத்திய அரசின் சாலை உள்கட்டமைப்பு நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.