Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு

உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு

உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு

உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு

Latest Tamil News
புதுடில்லி: கொள்கைகளை உள்ளடக்கிய ஒத்துழைப்பை உருவாக்குவது மிகவும் சவாலானது. உலகளாவிய ஒத்துழைப்பு அவசியமானது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

4வது கௌடில்யா பொருளாதார மாநாட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைநகர் டில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. பொருளாதார தடைகள், வரிவிதிப்பு மற்றும் பிரித்தாளும் சூழ்ச்சி உள்ளிட்டவை பிற நாடுகளின் தொடர்புகளை துண்டிக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் பாதிப்புகள் ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு வரும் தன்மையை கொண்டுள்ளது.

பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இதுபோன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் திறன் நமக்கு அதிகரிக்கிறது. கொள்கைகளை உள்ளடக்கிய ஒத்துழைப்பை உருவாக்குவது மிகவும் சவாலானதாகும். குறிப்பாக, உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம். உலக அரங்கில் நாம் முடிவுகளை எடுக்கும் திறனை கொண்டிருக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us