அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
ADDED : மே 18, 2025 07:26 AM

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்து விட்டதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், அமர்நாத் யாத்திரையில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க கவனம் செலுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் காரணமாக, இந்த கோடை சீசனில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாங்கள் அமர்நாத் யாத்திரையில் முழு கவனம் செலுத்த போகிறோம். எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த யாத்திரைக்குப் பிறகு சுற்றுலாவை மேம்படுத்த தேவையான முயற்சிகள் எடுக்கப்படும், இவ்வாறு கூறினார்.
52 நாட்கள் கொண்ட அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரையில் இந்த யாத்திரையில் பங்கேற்க நாடு முழுவதும் 3.5 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது