வாகன சோதனையின்போது கார் மோதி பெண் போலீஸ் பலி
வாகன சோதனையின்போது கார் மோதி பெண் போலீஸ் பலி
வாகன சோதனையின்போது கார் மோதி பெண் போலீஸ் பலி
ADDED : ஜூன் 13, 2025 05:13 AM
பாட்னா: பீஹாரின் பாட்னாவில், வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற கார் மோதியதில், பெண் போலீஸ் பரிதாபமாக உயிரிழந்தார்; மேலும் மூன்று போலீசார் காயம் அடைந்தனர்.
பீஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள அடல்பாத் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த காரை போலீசார் நிறுத்தும்படி சைகை செய்தனர்.
இதையடுத்து காரை மெதுவாக ஓட்டிய டிரைவர் திடீரென, காரின் வேகத்தை அதிகரித்ததால், கார் மோதியதில் கோமல் குமாரி என்ற பெண் போலீஸ் உட்பட நான்கு போலீசார் பல அடி துாரம் துாக்கி வீசப்பட்டு காயம்அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை அப்பகுதியினர் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
படுகாயம் அடைந்த பெண் போலீஸ் கோமல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
நாளந்தாவை சேர்ந்த இவர் ஒரு மாதத்துக்கு முன்தான் இங்கு இடமாறுதல் பெற்று வந்தார்.
மற்ற மூவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
காரில் வந்த மற்ற இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.