மறுமணத்துக்கு மறுத்ததால் மருமகளை கொன்ற மாமனார்
மறுமணத்துக்கு மறுத்ததால் மருமகளை கொன்ற மாமனார்
மறுமணத்துக்கு மறுத்ததால் மருமகளை கொன்ற மாமனார்
ADDED : ஜூன் 13, 2025 05:05 AM
மொரேனா: மத்திய பிரதேசத்தின் மொரேனா சிவில் லைன்ஸ் பகுதியை சேர்ந்தவர் கியான் சிங் குர்ஜார், 65; முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் அஜய் குர்ஜாருக்கு பிரியங்கா, 38, என்ற பெண்ணுடன் திருமணமாகி, 7 வயதில் மகள், 5 மற்றும் 3 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு அஜய் இறந்துவிட்டார். இந்நிலையில், மாமனார் கியான்சிங் தன் அண்ணன் மகனை மணந்து கொள்ளும்படி பிரியங்காவை வற்புறுத்தினார்.
ஆனால், மூன்று குழந்தைகள் இருப்பதால் மறுமணம் வேண்டாம் என பிரியங்கா மறுத்தார். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு மீண்டும் மாமா, மருமகள் இடையே கடும் வாக்கு வாதம் நடந்தது.
அப்போது மாமனார் கியான் சிங், நாட்டுத் துப்பாக்கியால் பிரியங்காவை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். இதில் சம்பவ இடத்திலேயே பிரியங்கா உயிரிழந்தார்.
தலைமறைவான கியான் சிங்கை போலீசார் தேடிவருகின்றனர்.