ADDED : மே 21, 2025 03:24 AM
முசாபர்நகர்:உத்தர பிரதேசத்தில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி சுட்டுக் கொலை செய்த இருவரை போலீசார் தேடுகின்றனர்.
உ.பி., மாநிலம் முசாபர் நகர், புதானா அருகே தாண்டா மஜ்ரா கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ரவீந்தர்,55, என்ற விவசாயியை, இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ரவீந்தர் அதே இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், முன்பகை காரணமாக கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக இருவரை போலீசார் தேடுகின்றனர்.