வாகன சோதனையில் வெடிப்பொருள் பறிமுதல்
வாகன சோதனையில் வெடிப்பொருள் பறிமுதல்
வாகன சோதனையில் வெடிப்பொருள் பறிமுதல்
ADDED : மே 17, 2025 02:19 AM

பாலக்காடு:வாளையாரில், வாகன சோதனையின் போது அனுமதியின்றி கடத்தி வந்த வெடிபொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி, வாளையார் இன்ஸ்பெக்டர் ராஜீவ் தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், வாளையாரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோவை பகுதியில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், காய்கறி மூட்டைகளுக்கு அடியில், 200 பெட்டிகளில் வெடிபொருட்களான 25,400 ஜெலட்டின் குச்சிகள், 12 பெட்டிகளில் 1,500 டெட்டனேட்டர்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, லாரி டிரைவர் கோவை, மீனாட்சிபுரம் வலுக்குப்பாறை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 29, என்பவரை கைது செய்தனர். எங்கிருந்து, யாருக்காக வெடிபொருட்கள் கடத்தி செல்லப்பட்டன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.