காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை; 5 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம்
காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை; 5 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம்
காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை; 5 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம்
ADDED : ஜூலை 27, 2024 10:53 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலத்த காயமுற்றனர்.
கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகிறது. சமீபத்தில், கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் களத்தில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார். 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலத்த காயமுற்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.