பள்ளிகளில் குடிநீர் இயந்திரங்கள் முதல்வர் ரேகா குப்தா தகவல்
பள்ளிகளில் குடிநீர் இயந்திரங்கள் முதல்வர் ரேகா குப்தா தகவல்
பள்ளிகளில் குடிநீர் இயந்திரங்கள் முதல்வர் ரேகா குப்தா தகவல்
ADDED : ஜூன் 06, 2025 09:20 PM
புதுடில்லி:“அனைத்து அரசுப் பள்ளிகளிலும் குடிநீர் இயந்திரங்கள் நிறுவப்படும்,”என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
ஷாலிமார் பாக் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரத்தை, முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்து பேசியதாவது:
முந்தைய ஆம் ஆத்மி அரசு, கல்வித் தரத்தை மேம்படுத்துவதாக கூறி, சுமாராக படித்த லட்சக்கணக்கான மாணவர்களை அரசுப் பள்ளிகளில் இருந்து நீக்கியது.
ஷாலிமார் பாக் தொகுதி ஹைதர்பூர் பகுதியில் அறிவியல் படிப்புகளுக்கு ஒரு பள்ளி கூட இல்லை. இந்த ஆண்டு, 7,000 ஸ்மார்ட் வகுப்பறைகளை பா.ஜ., அரசு அமைக்கும், மேலும், 100 மொழி ஆய்வகங்கள் மற்றும் 175 டிஜிட்டல் நூலகங்களும் துவக்கப்படும். பட்ஜெட்டில் அறிவித்தபடி, இந்த ஆண்டு டில்லி அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற 1,200 மாணவர்களுக்கு 'லேப் - டாப்' வழங்கப்படும். அரசுப் பள்ளிகள் சீரமைக்கப்பட்டு, குடிநீர் இயந்திரங்கள் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீர்வளத் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.