Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ பீதியடைய வேண்டாம்!

பீதியடைய வேண்டாம்!

பீதியடைய வேண்டாம்!

1


ADDED : மே 02, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2026 11:28 PM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெப்ப அலை குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். தினசரி எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும். வெப்பம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் நிலையில் உள்ளது. இதில், மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த முயற்சி தேவை.

ஜிதேந்திர சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,

வெறும் கண்துடைப்பு!


மேற்கு வங்கத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெறும் கண்துடைப்பு. அவை பங்குச்சந்தையை நிலைநிறுத்தவே வெளியிடப்படுகின்றன. இதை யாரும் நம்ப வேண்டாம். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளி ல் திரிணமுல் காங்., அமோக வெற்றி பெறும்.

மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்., கட்சி

வெற்றி பெற முடியாது!


வாக்காளர்களை குழப்பமடைய செய்ய வேண்டும் என்பதற்காகவே தே ர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு களில் பா.ஜ., தில்லுமுல்லு செய்துள்ளது. மக்களை தவறாக வழிநடத்த அக்கட்சி முயற்சி செய்யலாம். ஆனால் அதில் வெற்றி பெற முடியாது. ஓட்டு எண்ணிக்கை நாளன்று பா.ஜ.,வின் முகத்திரை கிழிக்கப்படும்.

கவுரவ் கோகோய், அசாம் மாநில காங்., தலைவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us