மஹா.,வில் ஒரே நாளில் 67 பேரை கடித்த நாய்கள்
மஹா.,வில் ஒரே நாளில் 67 பேரை கடித்த நாய்கள்
மஹா.,வில் ஒரே நாளில் 67 பேரை கடித்த நாய்கள்
ADDED : செப் 15, 2025 12:01 AM

தானே:மஹாராஷ்டிராவில் நேற்று முன்தினம் ஒரே நாளில், 67 பேரை தெருநாய்கள் கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தெருநாய்கள் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் - டோம்பிவலி மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக, தெருநாய்கள் தினமும் சிலரை கடிப்பதாக தகவல் வெளியாகின.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் இங்கு தெருநாய்கள் கடித்ததில், 67 பேர் காயம் அடைந்ததாக மாநகராட்சி சுகாதார அதிகாரி தீபா சுக்லா தெரிவித்தார். நாய்க்கடி தொல்லையால் குடியிருப்புவாசிகள் கவலை அடைந்துள்ளனர்.
தெருநாய் தொல்லை திடீரென அதிகரித்துள்ளதால், மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள், நாய்க்கடியில் இருந்து பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.