Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மருத்துவமனையில் உடலை கடித்து குதறிய நாய்கள்

மருத்துவமனையில் உடலை கடித்து குதறிய நாய்கள்

மருத்துவமனையில் உடலை கடித்து குதறிய நாய்கள்

மருத்துவமனையில் உடலை கடித்து குதறிய நாய்கள்

ADDED : மே 12, 2025 12:31 AM


Google News
நர்மதாபுரம்: மத்திய பிரதேசத்தில், அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த உடலை, நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு நர்மதாபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிகில் சவுராசியா, 21, என்ற இளைஞர், கடந்த 9ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக நர்மதாபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனையில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதால், பிணவறை வசதி இல்லை.

இதனால், உயிரிழந்த நிகில் சவுராசியாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக திறந்தவெளியில் இரவு முழுதும் வைக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலை, உடலை பெறுவதற்காக நிகில் சவுராசியாவின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்தனர்.

உடலை நாய்கள் கடித்து குதறி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோவும், சமூக வலைதளங்களில் வெளியானது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us