கிராமமே வக்புக்கு சொந்தமா?: திருச்சியை சேர்ந்தவர் மனு
கிராமமே வக்புக்கு சொந்தமா?: திருச்சியை சேர்ந்தவர் மனு
கிராமமே வக்புக்கு சொந்தமா?: திருச்சியை சேர்ந்தவர் மனு
ADDED : மே 15, 2025 12:29 AM

ஒட்டுமொத்த கிராமமும் வக்பு சொத்து என அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீமான் சந்திரசேகர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நான், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை கிராமத்தை சேர்ந்தவன். இங்குள்ள என் நிலம் உட்பட ஒட்டுமொத்த கிராமமும் வக்பு சொத்து என தமிழ்நாடு வக்பு வாரியம் உரிமை கோருகிறது. எங்கள் கிராமத்தில், 1500 ஆண்டுகள் பழமையான கோவில் உள்ளது.
ஆனால், 1400 ஆண்டுகள் பழமையான முஸ்லிம் மதத்தின் வக்பு சொத்து என எங்கள் கிராமத்தை உரிமை கோருவது எந்த வகையில் நியாயம்.
கடந்த, 2022ல் எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர் தன் மகள் திருமணத்திற்காக நிலத்தை விற்க முயன்றார்.
அப்போது தான் ஒட்டுமொத்த கிராமமும், ஐந்து கோவில்களும் வக்பு சொத்து என அறிவிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டு உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் உள்ள வக்பு வழக்குகளுடன் சேர்த்து இந்த மனுவும் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-டில்லி சிறப்பு நிருபர்-