Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மக்கள் இயக்கமாக மாறிய டிஜிட்டல் இந்தியா: மோடி

மக்கள் இயக்கமாக மாறிய டிஜிட்டல் இந்தியா: மோடி

மக்கள் இயக்கமாக மாறிய டிஜிட்டல் இந்தியா: மோடி

மக்கள் இயக்கமாக மாறிய டிஜிட்டல் இந்தியா: மோடி

ADDED : ஜூலை 02, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''டிஜிட்டல் இந்தியா திட்டம் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை நீக்கி, வாய்ப்பை ஜனநாயகப்படுத்தியது. அது தற்போது ஒரு மக்கள் இயக்கமாக மாறி விட்டது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கடந்த 2015 ஜூலை 1ல், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

இத்திட்டம் துவங்கி, 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட பதிவு:

கடந்த 2014 வரை, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான இந்தியர்களின் திறன்கள் மீது சந்தேகம் இருந்தது.

இந்த அணுகுமுறையை பா.ஜ., அரசு மாற்றியது. குடிமக்கள் மீது நம்பிக்கை வைத்து, 10 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டம், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை நீக்கி, வாய்ப்பை ஜனநாயகப்படுத்தியது. அது தற்போது ஒரு மக்கள் இயக்கமாக மாறி விட்டது.

கடந்த 2014ல், நாட்டில் 25 கோடி இன்டர்நெட் இணைப்புகள் இருந்தன. இது தற்போது, 97 கோடியாக அதிகரித்துள்ளது.

நாட்டின் தொலைதுார கிராமங்களில் கூட, அதிவேக இன்டர்நெட் வசதி கிடைக்கிறது.

நம் நாட்டின், '5ஜி' வெளியீடு உலகின் வேகமான ஒன்று. இரு ஆண்டுகளில் 4.81 லட்சம் அடிப்படை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

நாங்கள் ஆட்சிக்கு வந்த போது, இன்டர்நெட் குறைவாகவும், டிஜிட்டல் கல்வியறிவு, அரசு சேவைகளுக்கான ஆன்லைன் அணுகல் குறைவாக இருந்தது.

இந்தியா போன்ற பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், டிஜிட்டல் திட்டம் சரியாக வருமா என, பலர் சந்தேகித்தனர்.

ஆனால், 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியால் அந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளும் பயனடைந்துள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us