Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பல்கலை நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த தன்கர்

பல்கலை நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த தன்கர்

பல்கலை நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த தன்கர்

பல்கலை நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த தன்கர்

ADDED : ஜூன் 26, 2025 06:47 AM


Google News
Latest Tamil News
நைனிடால் : உத்தராகண்டில் பல்கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மூன்று நாள் பயணமாக உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலுக்கு சென்றுள்ளார். நேற்று அங்குள்ள குமாவோன் பல்கலையில் நடந்த பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அங்கு, மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய துணை ஜனாதிபதி மேடையில் இருந்து கீழே இறங்கினார்.

அப்போது பார்வையாளர்கள் வரிசையில் முன்னாள் எம்.பி., மகேந்திர சிங் பால் அமர்ந்திருந்ததை கண்டார். இவரும், தன்கரும் நெருங்கிய நண்பர்கள்; ஒரே நேரத்தில் எம்.பி.,யாக இருந்தவர்கள்.

நீண்ட நாட்களுக்கு பின் நண்பரை கண்டதால் தன்கர் உணர்ச்சிவயப்பட்டார். மகேந்திர சிங்கை கட்டியணைத்தார். அப்போது, அவரது தோளிலேயே மயங்கி சரிந்தார்.

இதையடுத்து, அங்கிருந்த மருத்துவக் குழுவினர் துணை ஜனாதிபதிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, அவர் மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும் ராஜ் பவனுக்கு சென்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us