டில்லி தீ விபத்து; கீழே குதித்த 3 பேர் பலி
டில்லி தீ விபத்து; கீழே குதித்த 3 பேர் பலி
டில்லி தீ விபத்து; கீழே குதித்த 3 பேர் பலி
ADDED : ஜூன் 11, 2025 01:39 AM

புதுடில்லி: டில்லியின் துவாரகா பகுதியில், ஒன்பது தளங்கள் உடைய அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது தளத்தில், நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இந்த தளத்தில் வசித்த யாஷ் யாதவ், 35, என்பவர், தீ விபத்தில் இருந்து தப்பிக்க, எட்டாவது தளத்தின் பால்கனியில் இருந்து, தன் 12 வயது மகள் மற்றும் உறவினரின் 11 வயது மகன் ஆகியோருடன் கீழே குதித்தார். இதில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்த மீட்புப் படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷ் யாதவ் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர்.
விபத்தில், யாஷ் யாதவின் மனைவி, அவரது 18 வயது மகன் காயமடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.