ADDED : ஆக 04, 2024 12:47 AM

தெலுங்கானாவில் சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் என் தலைமையிலான காங்., அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினர் முயற்சிக்கின்றனர். மேலும், ஹைதராபாத் நகரின் நற்பெயரை சீர்குலைக்கவும் சிலர் சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதல்வர், காங்.,
மேல்முறையீடு செய்வோம்!
பட்டியல் ஜாதியினருக்குள் துணை குழுக்களை அனுமதிப்பது நியாயமானதல்ல. இந்த இட ஒதுக்கீட்டில், கிரீமிலேயரை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்வோம்.
சிராக் பஸ்வான், மத்திய அமைச்சர், லோக் ஜன்சக்தி
ஆதாயம் தேட முயற்சி!
ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, 'பவர் ஜிஹாத்'தில், பா.ஜ., ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளை பிளவுபடுத்தி, அதன் வாயிலாக அக்கட்சி ஆதாயம் தேட முயற்சிக்கிறது.
உத்தவ் தாக்கரே, தலைவர், உத்தவ் பாலாசாகேப், தாக்கரே சிவசேனா